மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவன் கைது | தர்மபுரி செய்திகள் | Dinamalar
மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவன் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
10:01

தொப்பூர்: தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செல்வமணிகண்டன், 29. இவரது மனைவி திவ்யா, 25. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, செல்வமணிகண்டன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம், இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வமணிகண்டன், திவ்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். திவ்யா புகார்படி, தொப்பூர் போலீசார் செல்வமணிகண்டனை கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X