கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: அர்ஜூன் சம்பத் அரசுக்கு வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
10:27

கோபி: ''இந்து கோவில்களில், அறநிலையத்துறை விதிகளின் படி, இந்துக்கள் மட்டுமே பணியாற்ற முடியும்,'' என, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.


இந்து மக்கள் கட்சியின் இணைப்பு விழா மற்றும் கொடியேற்று விழா, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: இந்து கோவில்களில், அறநிலையத்துறை விதிகளின் படி, இந்துக்கள் மட்டுமே பணியாற்ற முடியும். சமீபத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பணிக்கு, இஸ்லாமியர்களையும் நியமனம் செய்தது சட்டவிரோதம். அதற்கான நியமன உத்தரவை திரும்ப பெற வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு சிவகாசி பட்டாசுகளை ஆதரிக்க வேண்டும். சீன பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளை மூடுவதாக, கனிமொழி வாக்குறுதி அளித்தார். இதை அவர் நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இந்து மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தின் முன் அக்.,26ல், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, மக்கள் இயக்கத்தை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை துவக்கியுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். சசிகலா விவகாரத்தை அ.தி.மு.க.,வினரே 'டீல்' செய்து கொள்வர். இவ்வாறு கூறினார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X