ஊதிய உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தை: அ.தி.மு.க., பாணியில் தி.மு.க., உள்ளது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
10:35

ஓசூர்: ''ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, போனஸ், பண்டிகை கால முன்தொகை வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையில், அ.தி.மு.க., ஆட்சியின் அதே பாணியில்தான், தி.மு.க.,வும் காலத்தை நீட்டிக்கின்றனர்,'' என, மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ஆனந்தன் கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: காஸ் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு, மத்திய அரசு கடைப்பிடிக்கும் வரி, பொருளாதார கொள்கை தான் காரணம். தமிழகத்தில் புதிய அரசு, எங்களது எதிர்பார்ப்புகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வகையில், நிதானமாக பயணித்து வருகிறது. தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, அவசர உணர்வோடு தமிழக அரசு முன்வர வேண்டும். போக்குவரத்து, மின்வாரிய மற்றும் அரசின் கட்டமைப்பில் இயங்கக்கூடிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, போனஸ், பண்டிகை கால முன்தொகை வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை போன்றவற்றில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் அதே பாணியில் தான், தி.மு.க.,வும் காலத்தை நீட்டிக்கின்றனர் என்ற கவலை உள்ளது. அதை மாற்றியமைக்க உடனடியாக முதல்வர் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X