வங்கதேச வாலிபர்களை பிடிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை | சேலம் செய்திகள் | Dinamalar
வங்கதேச வாலிபர்களை பிடிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
10:36

சேலம்: மாற்றுத்திறனாளி பெண் கொலை வழக்கில், வங்கதேச வாலிபர்களை கைது செய்ய, தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள அடுக்குமாடி வீட்டில், மாற்றுத்திறனாளி தேஜ் மண்டல், 26, கொலை செய்யப்பட்டு, சூட்கேசில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தனிப்படை அமைத்து கமிஷனர் நஜ்முல் ?ஹாதா உத்தரவிட்டார். விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த நிஷி, 29, லுப்லு, 31, கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் குறித்து பெங்களூரு, ஓசூரில் விசாரித்தபோது, அவர்களின் போலி வாக்காளர் அட்டை, ஆதார் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கொலையாளிகள் வங்க தேசத்துக்கு தப்பியதை உறுதிப்படுத்தினர். இதனால் வங்கதேச போலீசாரின் உதவி கோரி, சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு, கமிஷனர் கடிதம் கொடுத்துள்ளார். அனுமதி கிடைத்த பின், தனிப்படை போலீசார் வங்கதேசம் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X