இன்ஜி., மாணவர் சேர்க்கை 14.4 சதவீதம் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
15:40

கோவை : பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான பொது மற்றும் துணை கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், கடந்தாண்டுகளை காட்டிலும் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை 14.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி தெரிவித்தார்.




தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு நிறைவுபெற்றுள்ளன. அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 871 இடங்களில் 95 ஆயிரத்து 69 இடங்கள் நிரம்பியுள்ளன. 56 ஆயிரத்து 802 இடங்கள் காலியாகவுள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பொறியியல் மாணவர் சேர்க்கை, 14.4 சதவீதம் உயர்ந்துள்ளது.



கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:


நடப்பாண்டில் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிசினஸ் சிஸ்டம், இ.சி.இ., உள்ளிட்ட துறைகளை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்துள்ளனர்.மொத்தமுள்ள, 440 கல்லுாரிகளில், 100 கல்லுரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான இடமே நிரம்பியுள்ளன. இக்கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை தனிக் குழு அமைத்து, கண்காணிப்புகளை மேற்கொண்டு உரிய தரத்தை மேம்படுத்த வேண்டும்.


மொத்த இடங்களில், நடப்பாண்டில், 62.6 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த, 2020ல் 48.2 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பின. 14.4 சதவீத சேர்க்கை உயர்வு, பொறியியல் படிப்பின் மீது ஆர்வம் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.



இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X