வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
22:56

ராமநாதபுரம் : சுபமுகூர்த்த தினம், தீபாவளிக்கு துணி வாங்க ராமநாதபுரம் அரண்மனைப்பகுதி, வழி விடுமுருகன்கோயில், சந்தை பகுதியில் வாகனங்களில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



ராமநாதபுரம் அக்ரஹாரவீதி, தலைமை தபால்நிலையம், சாலைத்தெரு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் துணிகள், பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.நேற்று ஞாயிறு விடுமுறை , சுபமுகூர்த்தநாள் என்பதால் வழிவிடு முருகன் கோயில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரோடு, ராமேஸ்வரம் ரோடான போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் உள்ள மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.



துணி வாங்கவும் மக்கள் குவிந்தனர். ரோட்டோரத்தில் இரண்டு, நான்கு சக்கரவாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக போலீசார் பணியில் நியமிக்க மாவட்ட எஸ்.பி., காத்திக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X