ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் செங்சோலை மனநல காப்பகத்தில் உ.பி.,யைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துஉள்ளார்.
அவரை ஊரிலுள்ள உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு அதிகாரிகள்உதவ வேண்டும் என காப்பகம் மூலம் பலமுறை மனுஅளித்து பலன்இல்லை என நிர்வாக அலுவலர் காந்தா தலைமையில் குழுவாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.
குணமடைந்துள்ள ராம்கலி சஞ்சனாபாய் ரீட்டா 20 கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் வரும்போது உறவினர்கள் என்னை இங்கு விட்டு சென்றனர். எனக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. உ.பி., மசாக்மா பாடாக் சில்லா கட்னி எனது ஊர், கணவர் பெயர் தீபக்லால்,சகோதரர், சகோதரிகள்உள்ளனர். ஆகையால்ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் உதவ வேண்டும் என கூறினார்.