வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் திடீர் 'பிரேக் டவுன்!'பணம் இல்லாமல் மாநகராட்சி தடுமாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 அக்
2021
01:54
பதிவு செய்த நாள்
அக் 26,2021 00:42

கோவை, அக். 26-நிதி பற்றாக்குறை காரணமாக, வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி பாதியில் முடங்கியுள்ளது. வங்கி கடன் பெறுவதற்கான முயற்சியில், கோவை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.


கோவை மாநகராட்சி சார்பில், வெள்ளலுாரில், 61.62 ஏக்கர் பரப்பளவில், ரூ.168 கோடியில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது.இதில், 50 சதவீத தொகையான ரூ.84 கோடியை தமிழக அரசு வழங்கும். மீதமுள்ள, 84 கோடி ரூபாயை மாநகராட்சி பொது நிதியில் இருந்தோ அல்லது வங்கியில் கடன் பெற்றோ, செலவழித்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.இந்த நிபந்தனையின் கீழ், பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.


வணிக வளாகமாக செயல்படும் பிரதான கட்டடம் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கான 'ரேக்' மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவழிக்கப்பட்டது. அரசு தரப்பில் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.தற்போது மாநகராட்சி நிதி நிலைமை படுமோசமாக இருக்கிறது. ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சம்பளம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக, மாதந்தோறும், 22 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்த வகையில், ஒப்பந்ததாரர்களுக்கு, 120 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஈட்டப்படும் வருவாயில் நிர்வாக செலவு போக எஞ்சிய தொகை, ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.


இச்சூழலில், வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் கட்டும் ஒப்பந்த நிறுவனம், 11 கோடி ரூபாய் கேட்டு, பில் சமர்ப்பித்துள்ளது. அவ்வளவு தொகை கொடுக்க வழியில்லாமல், மாநகராட்சி திணறுகிறது.பல கோடி ரூபாய் நிலுவை இருப்பதால், பஸ் ஸ்டாண்ட் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சி பங்களிப்பு தொகையில் பணியை தொடர, வங்கியில் கடன் பெறுவதற்கு, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.


அதற்கான வேலையில், மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டபோது, ''தமிழக அரசு - 50 சதவீதம், மாநகராட்சி - 50 சதவீத பங்களிப்பு தொகையில், பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும். தமிழக அரசு பங்களிப்பு தொகையை எதிர்பார்த்திருக்கிறோம். இதுநாள் வரை, மாநகராட்சி பொது நிதியில் செலவழித்து விட்டோம். 'டுபிட்கோ' மூலம் கடன் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறோம். பணி நிற்கவில்லை; பணம் விடுவிப்பதற்கேற்ப மெதுவாக நடக்கிறது,'' என்றார்.


சிறப்பு நிதி ஒதுக்கணும்


மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி தேவையை பூர்த்தி செய்ய, மாதந்தோறும் ரூ.10 கோடி முதல், 12 கோடி ரூபாய் வரை மாநில அரசு வழங்குவது வழக்கம். அவ்வாறு பெறப்படும் தொகையில் செலவினங்கள் போக மீதமிருந்தால், மாநகராட்சி செலுத்த வேண்டிய வங்கி கடன் மற்றும் இதர தொகை செலுத்தப்படும். இப்போது, வங்கி கடன் உள்ளிட்ட தொகைகளை பிடித்தம் செய்து விட்டு, மீதமுள்ள தொகையே வழங்கப்படுகிறது.


அதன் காரணமாக, 2 கோடி ரூபாயே மாநகராட்சிக்கு கிடைக்கிறது.தேவை அதிகம்; நிதி ஒதுக்கீடு குறைவு என்பதால், தடுமாற்றம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, கோவை மாநகராட்சிக்கென சிறப்பு நிதியை, தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangarapandi - coimbatore,இந்தியா
26-அக்-202109:15:19 IST Report Abuse
sangarapandi கோவை மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு, 120 கோடி ரூபாய் செலுத்த வேண்டியது இருக்கிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது வரும் தீபாவளிக்குள் தொகை வழங்க வேண்டப்படுகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X