கடலுார் : புதுச்சத்திரம் அருகே கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தாக,கலெக்டரிடம் கணவன், மனைவி புகார் மனு அளித்தனர்.
புதுச்சத்திரம் அருகே கே.பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி தேவி, 32; ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதில், பஞ்சங்குப்பத்தில் வசிக்கும் செல்வராஜ்- சித்ரா ஆகியோரின் 16 வயது மகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து போலீசில் நாங்கள் கூறியதாக நினைத்து, அதே ஊரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 6 பேர் சேர்ந்து, நாங்கள் ஊரில் இருக்க கூடாது.
கோவில், கிராமத்தில் நடக்கும் எந்த வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என கூறி, ஊரை விட்டு விலக்கி வைத்தனர். எங்களை மீண்டும் கிராமத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளனர்.