கிராமத்தில் ஒதுக்கி வைத்ததாக கலெக்டரிடம் தம்பதி புகார் | கடலூர் செய்திகள் | Dinamalar
கிராமத்தில் ஒதுக்கி வைத்ததாக கலெக்டரிடம் தம்பதி புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
04:25

கடலுார் : புதுச்சத்திரம் அருகே கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தாக,கலெக்டரிடம் கணவன், மனைவி புகார் மனு அளித்தனர்.



புதுச்சத்திரம் அருகே கே.பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி தேவி, 32; ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதில், பஞ்சங்குப்பத்தில் வசிக்கும் செல்வராஜ்- சித்ரா ஆகியோரின் 16 வயது மகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து போலீசில் நாங்கள் கூறியதாக நினைத்து, அதே ஊரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 6 பேர் சேர்ந்து, நாங்கள் ஊரில் இருக்க கூடாது.



கோவில், கிராமத்தில் நடக்கும் எந்த வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என கூறி, ஊரை விட்டு விலக்கி வைத்தனர். எங்களை மீண்டும் கிராமத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X