நெய்வேலி : நெய்வேலி அடுத்த ஆராய்ச்சிகுப்பம் கிராமத்தில் நடந்த முன்னெச்சரிக்கை மருத்துவ முகாமில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,நேரில் ஆய்வு நடத்தினார். நெய்வேலி அடுத்த ஆராய்ச்சிகுப்பம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக மாணவர் இறந்தார்.
தகவலறிந்த சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நெய்வேலி தொகுதியில் பி.டி.ஓ.,க்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களை தொடர்பு கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களுக்கு பரிசோதனை செய்து தேவையான சிகிச்சையளிக்க கேட்டுக் கொண்டார். நெய்வேலி அடுத்துள்ள ஆராய்ச்சிக்குப்பத்தில் முதல் கட்டமாக நேற்று மருத்துவ முகாம் நடந்தது. அங்கு நேரில் சென்று பார்வையிட்ட சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில், சுகாதாரப் பணிகளை சிறப்பாக நடத்தி, நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
இது போன்ற உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோய் பரவாமல் தடுக்க ஒவ்வொரு தனி நபரும் விழிப்போடு இருக்க வேண்டும், என்றார்.பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன். பி.டி.ஓ.,க்கள் சித்ரா, குமரன், மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர், அறிவொளி, விஜயராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.