கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல கோரிக்கைகள் குறித்து 418 பேர் மனு அளித்தனர். மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கடலுார் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு அளித்த மனுவை பரிசீலனை செய்து ரூ. 7500 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளை கலெக்டர் வழங்கினார். கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.