திருப்புத்தூரில் ரூ.7 கோடியில் காவலர் குடியிருப்பு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
திருப்புத்தூரில் ரூ.7 கோடியில் காவலர் குடியிருப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
04:57

திருப்புத்துார் : திருப்புத்துாரில் புதிய காவலர் குடியிருப்பு கட்டப்படும் இடத்தை காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி.,விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

புதுப்பட்டியில் காவலர்குடியிருப்பு 1971ல் உருவாக்கப்பட்டது. 50 வீடுகள் கொண்ட அந்த காவலர் குடியிருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து பயன்படாமல் போனது. பெரும்பாலான போலீசார் வாடகைக் கட்டடங்களில் குடியிருந்தனர். இதனையடுத்து ரூ 7 கோடி மதிப்பில் புதிய காவலர் குடியிருப்பு கட்ட முடிவானது. மேலும் அதற்காக பழைய கட்டடங்களும் அண்மையில் இடிக்கப்பட்டன.நேற்று அந்த இடத்தை டி.ஜி.பி., விஸ்வநாதன் ஆய்வு செய்தார். புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தேவையான இடம் உள்ளதா என்பதை பார்வையிட்டார். உடன் எஸ்.பி. செந்தில்குமார், ஏ.டி.எஸ்.பி.பாஸ்கரன், டி.எஸ்.பி., ஆத்மநாதன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X