521 வருவாய் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்: மாவட்ட நீதிபதி தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
04:59

சிவகங்கை : இலவச சட்ட உதவி மைய பயன்பாடு, நீதிமன்றத்தை அணுகும் வழிமுறை குறித்து 521 வருவாய் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதி சாய் பிரியா தெரிவித்தார்.



அவர் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ம் ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு குக்கிராம மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,2 முதல் நவ., 14 ம் தேதி வரை குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இலவச சட்ட உதவி முகாமை அணுகலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அளித்து வருகிறோம்.



மாவட்ட அளவில் 521 வருவாய் கிராமங்களில் 37 தலைப்புகளில் விழிப்புணர்வினை வழங்க திட்டமிட்டதில், இது வரை 200 வருவாய் கிராமங்களில் 18 தலைப்புகளில் கிராமப்புற பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ளோரிடம் அளித்துள்ளோம். மக்கள் எந்தவித பிரச்னையாக இருந்தாலும் தயங்காமல் இலவச வட்ட மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவை நாடி தீர்வு பெறலாம்.



இதில் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்து நடத்த வழக்கறிஞர் செலவு இலவசம். மாவட்ட மக்கள் இந்த சட்ட உதவி மையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம், என்றார். மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதி பரமேஸ்வரி உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X