521 வருவாய் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்: மாவட்ட நீதிபதி தகவல் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
521 வருவாய் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்: மாவட்ட நீதிபதி தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
04:59

சிவகங்கை : இலவச சட்ட உதவி மைய பயன்பாடு, நீதிமன்றத்தை அணுகும் வழிமுறை குறித்து 521 வருவாய் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதி சாய் பிரியா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ம் ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு குக்கிராம மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,2 முதல் நவ., 14 ம் தேதி வரை குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இலவச சட்ட உதவி முகாமை அணுகலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அளித்து வருகிறோம்.மாவட்ட அளவில் 521 வருவாய் கிராமங்களில் 37 தலைப்புகளில் விழிப்புணர்வினை வழங்க திட்டமிட்டதில், இது வரை 200 வருவாய் கிராமங்களில் 18 தலைப்புகளில் கிராமப்புற பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ளோரிடம் அளித்துள்ளோம். மக்கள் எந்தவித பிரச்னையாக இருந்தாலும் தயங்காமல் இலவச வட்ட மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவை நாடி தீர்வு பெறலாம்.இதில் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்து நடத்த வழக்கறிஞர் செலவு இலவசம். மாவட்ட மக்கள் இந்த சட்ட உதவி மையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம், என்றார். மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதி பரமேஸ்வரி உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X