பி.டி.ஓ., மீது தாக்குதல்: ஊழியர்கள் போராட்டம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பி.டி.ஓ., மீது தாக்குதல்: ஊழியர்கள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
05:03

காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ., சத்தியனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தினர்.



காளையார்கோவில் ஒன்றி துணை சேர்மனாக இருப்பவர் ராஜா, இவர் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக கிராம வளர்ச்சி பி.டி.ஓ., சத்தியனிடம் தகராறு செய்து தாக்கினார். ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பணி பாதுகாப்பு கோரியும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பணி புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தினர். ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் செல்வக்குமார், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து பணி பாதுகாப்பு வேண்டும், என கூறி போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தும் இன்று அலுவலகத்தில் பணியில் இருந்த பி.டி.ஓ., சத்தியன் தாக்கப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் ஒன்றிய அலுவலகங்களை மூடி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X