திண்டுக்கல் : உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 5 விவசாயிகள் மீது பா.ஜ., வினரின் கார் பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவசாயிகளின் அஸ்தியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி விவசாயிகளின் அஸ்தி நேற்று வேன்மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் ராஜப்பா, காங்., நகர தலைவர் மணிகண்டன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் லாசர், குணசேகரன் மற்றும் விவசாயிகள், வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.