'பீமா ஜுவல்லரி' நெல்லையில் துவக்கம் | சென்னை செய்திகள் | Dinamalar
'பீமா ஜுவல்லரி' நெல்லையில் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
05:51

திருநெல்வேலி : நெல்லை ஸ்ரீபுரத்தில், 'பீமா ஜுவல்லரி' புதிய பிரமாண்ட ஷோரூம் கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.கேரளா மற்றும் நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இயங்கிவரும் பீமா ஜுவல்லரி நிறுவனத்தின் புதிய கிளை, நெல்லை ஸ்ரீபுரத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.



இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திறப்பு விழாவில் போலீஸ் துணைக் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், பீமா ஜுவல்லரி சேர்மன் டாக்டர் கோவிந்தன் மற்றும் குடும்பத்தினர், செய்யது குரூப் ஆப் கம்பெனிஸ் டி.இ.எஸ்.பத்ஹூர் ரப்பானி, முன்னாள் பேராயர் ஜூடுபால்ராஜ், ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப்பாண்டியன், நெல்லை கேபிட்டல் மார்க்கெட் சர்வீசஸ் மேனேஜிங் டைரக்டர் செல்வம், இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவர் டாக்டர் காஞ்சனா சுரேஷ் விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.விழாவில் 'தினமலர்' தினேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி., ராமசுப்பு, ஊத்துமலை ஜமீன்தார் முரளிராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார், வாகை கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.திறப்பு விழா சலுகையாக, நகைகள் வாங்கும் போது தங்கம் விலையில் கிராமுக்கு ௧௦௦ ரூபாய் தள்ளுபடி மற்றும் ஒரு தங்க நாணயமும், வைர நகைகளுக்கு காரட்டிற்கு ௧௨ ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.இது குறித்து பீமா ஜூவல்லரி தலைவர் டாக்டர் கோவிந்தன் கூறுகையில், ''பீமா என்றால் துாய்மை என்று பொருள். துாய்மையான தங்கம் இப்போது திருநெல்வேலியில் காலடி எடுத்து வைத்துள்ளது,'' என்றார்.நிர்வாக அதிகாரி சுதிர்கபூர் கூறுகையில், ''௯௭ ஆண்டு பாரம்பரியம் மிக்க பீமா ஜுவல்லரியில் நகைகள் பல வித ரகங்களில் புதிய டிசைனில் துாய தங்கத்துடன் புதிய கலெக்சன்கள், விற்பனை செய்யப்படுகிறது. ''பீமா ஜுவல்லரியில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அது அற்புதமான அனுபவத்தை தரும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X