குன்னுார்:குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கலலுாரி என்.சி.சி., சார்பில், ஐ.நா., தினத்தையொட்டி, ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி, மத நல்லிணக்க நாடகம் மற்றும் நடனத்தை மாணவியர் அரங்கேற்றினர்.தொடர்ந்து, எம்.ஆர்.சி., ராணுவ மையத்திற்கு சுதந்திர ஓட்டம் ஓடினர். வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேராசிரியர் சிந்தியா ஜார்ஜ் பேசுகையில், ''ஆண்டு தோறும் அக். 24ல் ஐ.நா., தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு உலக ஒற்றுமை மற்றும் அமைதி ஆண்டாக அனுசரிக்கப் படுகிறது,''என்றார். பின், என்.சி.சி., மாணவியரின் சார்பில், ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி நாடகம் நடந்தது.