பழங்குடியினர் கிராமங்களில் கல்வி விழிப்புணர்வு | நீலகிரி செய்திகள் | Dinamalar
பழங்குடியினர் கிராமங்களில் கல்வி விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
06:33

பந்தலுார்:பந்தலுார் அருகே, பொன்னானி, புஞ்சைவயல், உப்பட்டி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.பொன்னானியில் நடந்த நிகழ்ச்சிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் பேசுகையில், ''கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் மத்தியில் கல்வியின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. தற்போது பள்ளிகள் திறந்து செயல்பட உள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில், கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதி படுத்தவும், தொடர்ந்து கல்வியில் மேம்பாடு அடையவும் துணை நிற்க வேண்டியது அவசியம்,'' என்றார்.பொன்னானி ஜி.டி.ஆர். பள்ளி தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''தற்போதுள்ள சூழ்நிலையில், பழங்குடியின மாணவர்களை, 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய செய்ய வேண்டும் எனும் நோக்கில், பழங்குடியினர் கிராமங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது,'' என்றார்.ஆசிரியர்கள் தவமுரளி, ஷீலா, பொன்னழகு, கோவில் கமிட்டி தலைவர் பிரபாகரன் மற்றும் கிராம மக்கள் மாணவர்கள் கலை குழுவினர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X