இலக்கு மட்டுமே வெற்றியை தரும்: மாணவர்களுக்கு அறிவுரை | நீலகிரி செய்திகள் | Dinamalar
இலக்கு மட்டுமே வெற்றியை தரும்: மாணவர்களுக்கு அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
06:34

பந்தலுார்;பந்தலுார் டியூஸ் பள்ளி வளாகத்தில், ஆசிரியர்கள்;அரசு அதிகாரிகள்; சமூக ஆர்வலர்கள் இணைந்து துவக்கப்பட்ட, போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மைய துவக்க விழா நடந்தது.ஆசிரிய பயிற்றுனர் சண்முகம் வரவேற்றார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி பேசுகையில், '' இலக்கு மட்டுமே வெற்றியை தரும் என்பதை மனதில் வைத்து, அனைவரும் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.பந்தலுார் தாசில்தார் குப்புராஜ் பேசுகையில்,''எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை முதலில் முடிவு செய்தால் மட்டுமே வெற்றி பெற இயலும்,''என்றார்.மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கூடலுார் ஆர்.டி.ஓ.,சரவண கண்ணன் பேசுகையில், ''போட்டி தேர்வுக்கு எந்தெந்த பாடங்கள் முக்கியம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தினசரி பாடங்களை மனதில் பதியவைத்து கொண்டால் தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம் நீங்கும்,'' என்றார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்துாரி, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், டியூஸ் பள்ளி முதல்வர் சுசீந்திரன் நாத், பயிற்சியாளர் சத்யராஜ் உட்பட பலர் பேசினர். திரளான மாணவர் கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் பரமேஸ்வரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். ஆசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X