படகு இல்லத்தில் கடைகள் அகற்றம்: கோர்ட் உத்தரவின் படி நடவடிக்கை | நீலகிரி செய்திகள் | Dinamalar
படகு இல்லத்தில் கடைகள் அகற்றம்: கோர்ட் உத்தரவின் படி நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
06:35

ஊட்டி:ஊட்டி படகு இல்லத்தில் இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டன.ஊட்டி படகு இல்லத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், அடையாள அட்டை வழங்கி, பொருட்களை துாக்கி கொண்டு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது.அதில், பல வியாபாரிகள் நடைபாதையில் கடைகளை அமைத்து, வியாபாரம் செய்து வந்தனர். சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 'இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும்,' என, வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டது.நேற்று, ஊட்டி நகர டி.எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று, கோர்ட் உத்தரவுப்படி, கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து, வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து, 62 கடைகளை அகற்றி கொண்டனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X