செங்கத்துறை தடுப்பணையில் நீர் சேமிக்கமுடியாததால் வீணாகுது தண்ணீர்... விவசாயிகள் கண்ணீர்...'ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை' என குமுறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
06:40

சூலுார்:ஐந்து ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணை இதுவரை சரி செய்யப்படாததால் தண்ணீர் வீணாக ஆற்றில் கலந்துவருவது விவசாயிகளிடம் கவலை அளித்துள்ளது.சூலுார் அடுத்து, 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கத்துறை தடுப்பணை உள்ளது. 70 அடி நீளமுள்ள இந்த தடுப்பணையில் மழைநீர் தேங்கினால், செங்கத்துறை, குமாரபாளையம், காடாம்பாடி, தேவராயம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், 1,000க்கும் அதிகமான ஏக்கரில் விவசாயமும் செழிக்கும்.


மழை சமயத்தில் திருச்சி ரோட்டுக்கு தெற்கு பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி, செங்கத்துறை தடுப்பணைக்கு தண்ணீர் வரும். சூலூரில் உள்ள சின்னக்குளம் நிரம்பி வெளியேறும் உபரி நீர், ராமசந்திரா குளத்துக்கு செல்கிறது. இக்குளமும் நிரப்பினால், செங்கத்துறை தடுப்பணைக்கு தண்ணீர் செல்லும். கடந்த, 2017ம் ஆண்டு பெய்த கனமழையால் செங்கத்துறை தடுப்பணை நிரம்பியது.ஆனால், இரண்டே மாதத்தில் தடுப்பணை உடைந்தது, தண்ணீர் முழுவதும் வெளியேறியதால், விவசாயிகளிடம் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. அன்று முதல் வானம் பார்த்த பூமியாகவே தடுப்பணை உள்ளது. சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க, அரசு அலுவலகங்களுக்கு சென்று விவசாயிகள் மனுக்களை கொடுத்து நொந்து போனதுதான் மிச்சம்.இச்சூழலில், சமீபத்தில் சூலூர், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் பெய்த மழையால், குளங்கள், தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், சின்னக்குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறி ராமச்சந்திரா குளத்துக்கு செல்கிறது.


இக்குளம் நிரம்பி செங்கத்துறை தடுப்பணைக்கு மழைநீர் சென்றும், தடுப்பணையால் தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை நீடிக்கிறது. இந்நீர் நொய்யல் ஆற்றுக்கு வீணாக செல்வது, விவசாயிகளை கவலை அடையச்செய்துள்ளது.ஐந்தாண்டு போராட்டம்!கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க சூலூர் நகர தலைவர் முத்துசாமி, செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில்,'சேதமடைந்த தடுப்பணையை கட்ட வலியுறுத்தி ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். சூலூர் பேரூராட்சியில் கேட்டாலும், பொதுப் பணித்துறையிடம் கேட்டாலும் முறையான பதில் இல்லை.


கடந்த ஆட்சியில், முதல்வரை சந்தித்து மனு கொடுத்தோம். அதற்கு பிறகு, ஐந்து முறை திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறவில்லை. இதனால், 1,000 ஏக்கருக்கும் மேல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தடுப்பணையை சீரமைக்க வேண்டும். இல்லையேல் போராட்டத்தை விட்டால் வேறு வழியில்லை' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X