ஒரு போன் போதுமே! கழிவு குவிப்பால் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
07:02

பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், நா.மூ.சுங்கம் அருகே, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் ஆற்றுப்பாலம் அருகே ஓட்டல் கழிவு, இறைச்சிக்கழிவு குவிக்கப்பட்டுள்ளது. இதனால், துர்நாற்றம் நிலவுகிறது.ஜி.செல்வராஜ், அங்கலக்குறிச்சி.காய்ந்த மரத்தை அகற்றவில்லைபொள்ளாச்சி நேதாஜி ரோட்டில், காய்ந்த மரம் ஒன்று பல மாதங்களாக வெட்டி அகற்றப்படாமல் உள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.கே.மணிகண்டன், பொள்ளாச்சி.


அகற்றாத குப்பையால் இம்சைபொள்ளாச்சி வெங்கடேசாகாலனி, நேரு மண்டபம் வீதியில் குப்பை அகற்றப்படாமல் குவிந்துள்ளது.இதனால், துர்நாற்றம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகமும் தினமும் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.கிரிராஜ், பொள்ளாச்சி.ரோடு சீரமைக்க வேண்டும்பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தில், ஓடுதளம் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், இரவு நேரங்களில் மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. ரோட்டை சீரமைத்து, மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.ஆர். மோகன்ராஜ், பொள்ளாச்சி.வேகத்தடை அமைக்கணும்!பொள்ளாச்சி, விஜயராகவன் வீதி ---- வெங்கட்ராமன் ரோடு சந்திப்பில் விபத்து அபாயம் உள்ளது. வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. இதனை தவிர்க்க, அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.எஸ்.சரவணன், பொள்ளாச்சிநாய்த்தொல்லைமடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில், நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர். முருகப்பன், கிருஷ்ணாபுரம்.பராமரிப்பில்லாத மைதானம்மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால், பொதுமக்கள், இளைஞர்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சோ. முருகவேல், நரசிங்கபுரம்.வாகன ஓட்டுனர்கள் அவதிஉடுமலை வ.உ.சி., வீதியில் மழைநீர் வடிகால் வசதிக்காக தோண்டப்பட்ட மண் வெளியில் போடப்படுகிறது.


மழையால் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் இதில் சறுக்கி விழ வேண்டியதுள்ளது.க. வீரக்குமார், உடுமலை.சேதமடைந்த ரோடுஉடுமலை காந்திபுரம் நான்கு ரோடு சந்திப்பில், ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ். கந்தசாமி, உடுமலை.


பொதுமக்கள் அவதி


உடுமலை அருகே மருள்பட்டி பிரிவிலிருந்து, சர்க்கரை மில் செல்லும் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம். முனியாண்டி, உடுமலை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X