சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
07:11

வால்பாறை:நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து, சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம், வால்பாறை உட்கோட்டம் அட்டகட்டி நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை முன், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, உட்கோட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரபோஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கிளை தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில், அரசு விதிகளின் படி, 35, 35ஏ படி முதுநிலைப்பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஓராண்டு கூட முழுமையாக வழங்கப்படவில்லை.சாலைப்பணியாளர்களுக்கு பணி செய்ய கருவி, தளவாடங்கள் வழங்கப்படுவதில்லை. இதனை கண்டித்தும், வால்பாறை பகுதியில் பணிபுரியும் சாலைப்பணியாளர்களுக்கு, மழைக்கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.மேலும், வருங்கால வைப்பு நிதி கணக்கில் விடுபட்ட நிலுவைத்தொகையை, கணக்கில் சேர்க்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். கோட்ட துணைத்தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X