நீர்வீழ்ச்சியில் சிக்கிய தம்பதி உட்பட 4 பேர் மீட்பு | சேலம் செய்திகள் | Dinamalar
நீர்வீழ்ச்சியில் சிக்கிய தம்பதி உட்பட 4 பேர் மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
07:44

ஆத்துார்:சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில், முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு 'சூழல் சுற்றுலா திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருவதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.நேற்று முன்தினம் காலை முதல் மதியம் 2:00 மணி வரை, 915 பேர், நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றனர். மதியம் 3:00 மணியளவில், செந்நிறத்தில் அதிகளவில் தண்ணீர் வரத் துவங்கியதால், சுற்றுலா பயணியர் வெளியேற்றப்பட்டனர்.அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையத்தை சேர்ந்த, 3 வயது குழந்தையுடன் குளித்துக் கொண்டிருந்த தம்பதி உட்பட நான்கு பேர், நீர்வீழ்ச்சியின் மேற்கு பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.அங்கிருந்த வனத்துறையினர், குழந்தையுடன் பாறை இடுக்கில் நின்றிருந்த பெண்ணையும், மற்றவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். மறு உத்தரவு வரும் வரை, ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி படகு சவாரிக்கு சுற்றுலா பயணியர் செல்வதற்கு தடை விதித்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X