கோவையின் புது மாஸ்டர் பிளான்...விரிவடைகிறது! 1,574.15 சதுர கி.மீ.,க்கு விரிவாக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 அக்
2021
01:53
பதிவு செய்த நாள்
அக் 26,2021 22:41

கோவை: குறிச்சி உள்ளூர் திட்டக்குழுமம் கலைக்கப்பட்டு, கோவைக்கான புதிய 'மாஸ்டர் பிளான்' திட்டத்தில் இணைக்கப்படுகிறது. அதனால், 1,574.15 சதுர கி.மீ.,க்கு எல்லை விஸ்தரிக்கப்படுகிறது.


வரும், 2041ல் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை அடிப்படையில், 20 ஆண்டுகளுக்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணியில், நகர ஊரமைப்பு துறை ஈடுபட்டு வருகிறது.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வரைவு திட்டம் வெளியிடவும், 2022, பிப்.,யில் மாஸ்டர் பிளான் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, நகர ஊரமைப்பு துறை இயக்குனர் சரவணவேல் ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலில், கன்சல்டன்ட் ராகவ் குழுவினர், 'மாஸ்டர் பிளான்' இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.



தொழிற்பேட்டைகளுக்கு அருகிலேயே தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, மின்னணு பொருட்கள் உற்பத்தி பூங்கா ஏற்படுத்துவதற்கான இடம் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் எல் அண்டு டி பைபாஸ் அருகில், 'டிரக் டெர்மினல்' மற்றும் 'லாஜிஸ்டிக் பார்க்'ஏற்படுத்துவதற்கான இடம் மற்றும் 'மெமோ' ரயில் இயக்குவதற்கான வழித்தடத்தை, 'மாஸ்டர் பிளானில்' சேர்க்க, கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.


தங்க நகை உற்பத்தி பூங்கா உருவாக்கவும் தேவையான இடம் ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது,நியூயார்க் ஸ்டைலில்... மோட்டார் வாகனங்கள் அல்லாத போக்குவரத்துக்கான வழித்தடத்தை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. நியூயார்க் ஸ்டைலில், காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உருவாக்குவதற்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்க, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கோரியுள்ளார். பொருட்காட்சி நடத்தும் இடங்களை கண்டறிந்து, அப்பகுதி பூங்கா இடமாக அறிவிக்கப்பட உள்ளது.


கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதால், பசுமை பரப்பு அதிகரிக்கும். குடியிருப்பு பகுதிகளுக்கான ஒதுக்கீடு, 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.விவசாயம் செய்ய முடியாத நிலங்களை வகை மாற்றம் செய்ய, நகர ஊரமைப்பு துறை அலுவலகத்தை நாடி வருகின்றனர். அவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது. அரசு அலுவலர்களுக்கும் பணிச்சுமை ஏற்படுகிறது.



இதை தவிர்க்க, வகை மாற்றம் கோரி எந்தெந்த பகுதிகளில் இருந்து விண்ணப்பங்கள் அதிகமாக வருகின்றன என்பதை ஆய்வு செய்து, அவற்றின் உபயோகத்தை மாற்ற, முதன்மை ஆணையர் ஹிதேஷ்குமார் மக்வானா அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.எல்லை விரிவடைகிறதுகுறிச்சி, மலுமிச்சம்பட்டி, சீரபாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி, குறிச்சி உள்ளூர் திட்டக்குழுமம் செயல்படுகிறது.


இதை கலைத்து, 'கோவை மாஸ்டர் பிளானில்' சேர்க்க, முதன்மை செயலர் அறிவுறுத்தியிருக்கிறார்.ஏற்கனவே, கோவை மாநகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகள், 69 கிராம ஊராட்சிகளை இணைத்து, 1,52,618.9 ஹெக்டர் பரப்புக்கு 'மாஸ்டர் பிளான்' எல்லை விஸ்தரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதனுடன், குறிச்சி பகுதிக்கான 4,797.96 ஹெக்டேர் பரப்பு கூடுதலாக சேருகிறது.



இதன்படி, 1,574.15 சதுர கி.மீ., பரப்புக்கு 'மாஸ்டர் பிளான்' எல்லை விரிவடைய இருக்கிறது. வரும் நவ., இரண்டாவது வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் வரைவு பட்டியலில், குடியிருப்புக்கு ஒதுக்கிய பகுதி, தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கிய பகுதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும், மக்கள் பார்வைக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.


வரைவு திட்டத்தில்எந்தெந்த நகரங்கள்?


காரமடை, மோப்பேரிபாளையம் பேரூராட்சிகள் மற்றும் சிக்காரம்பாளையம், வடவள்ளி, காரேகவுண்டம்பாளையம், கரியம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், கிட்டாம்பாளையம், செம்மாண்டம்பாளையம், செலக்கரிச்சல், இடையர்பாளையம், போகம்பட்டி, பணப்பட்டி, அரசம்பாளையம், சொலவம்பாளையம், வடபுதுார், பொட்டையாண்டிபொரம்பு, குதிரையாலம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளும், வரைவு திட்டத்தில் சேர்க்கப்பட இருக்கிறது.


'நகர்ப்புற காடுகள் அவசியம்'தொழில் அமைப்புகள் விருப்பம்சிறுதுளி அமைப்பினர் தரப்பில், 'குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். பொது ஒதுக்கீடு இடங்களில், நகர்ப்புற காடுகள் உருவாக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அதிக இடங்களில் உருவாக்கி, சேமிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமானதாக இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


'கிரெடாய்' தரப்பில், 'பன்னடுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்' என்றும், 'சேம்பர் ஆப் காமர்ஸ்'சார்பில், 'வேளாண் மொத்த மார்க்கெட் உருவாக்க வேண்டும். திட்டச்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். கோவை - கரூர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் உருவாக்க வேண்டும். அவ்வழித்தடத்தில் இண்டஸ்ட்ரீஸ் ஜோன் ஏற்படுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மேலும், 'மெகா டெக்ஸ்டைல் பார்க்' மற்றும் 'மெடிக்கல் டூரிசம்' வருவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, கோரப்பட்டிருக்கிறது. இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, 'மாஸ்டர் பிளானில்' இணைக்கும் பணி நடந்து வருகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X