மரக்கன்று நடும் 'மெகா' திட்டம் தயார் நிலையில் ஊராட்சி நிர்வாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
23:50

அவிநாசி: கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை, நீர்நிலை பகுதிகளில், 'மெகா' மரக்கன்று நடும் திட்டம் விரைவில் துவக்கப்படுகிறது.

மாநிலம் முழுக்க, பரவலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதலபாதாளத்துக்கு சென்றுள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, பெய்யும் மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.பசுமையை பாதுகாக்க பெருமளவில், மரக்கன்று நட்டு வளர்க்கவும், அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்கேற்ப பெரும்பாலான ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது.

தற்போது பெய்து வரும் மழையில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப துவங்கியுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி குளம், குட்டை, நீர்நிலை ஓரங்களில் மரக்கன்று நட்டு வளர்க்க, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மெகா மரக்கன்று நடும் திட்டத்தை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதற்காக, கிராம ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில், மரக்கன்று நடுவதற்கு ஏற்ற இடங்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X