திருப்பூர்: திருவண்ணாலை அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் சேவையாற்ற, சேவார்த்திகள் முன்வரலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், பல லட்சம் பேர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப விழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு சார்பில், தீபத்திருவிழாவில் பங்கேற்கும் அடியார்களுக்கு, 30ஆண்டுகளாக, கோவிலை சுற்றியுள்ள, 16 திருமண மண்டபங்களில், அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம், சுக்கு காபி, நீர்மோர் வழங்கப்படுகிறது.பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், இந்நிகழ்வில் பங்கேற்று சேவையாற்றி வருகின்றனர்.
இந்தாண்டு, நவ., 19ம் தேதி தீபத்திருவிழாவில், 39ம் ஆண்டு அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.தீபத்திருவிழாவுக்கு தேவையான மளிகை பொருட்கள் நன்கொடையாக அளிக்க விரும்பும் பக்தர்கள், சேவையாற்ற விரும்பும் சேவார்த்திகள், தன்னார்வலர்களும் முன்வரலாம். இதற்காக, அன்னம் பாலிப்பு திருப்பணி குழு தலைமை நிர்வாகி சண்முகசுந்தரத்தை, 98430 66767 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.