டி.சி., சான்று வினியோகம்; கலெக்டர் அறிவுறுத்தல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
டி.சி., சான்று வினியோகம்; கலெக்டர் அறிவுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
23:58

திருப்பூர்: இடமாறுதல் சான்றிதழ் கேட்கும் மாணவருக்கு, உடனே வழங்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், கட்டண நிலுவை இருப்பதால், இடமாறுதல் சான்று பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.கட்டண நிலுவை உள்ளிட்ட காரணங்களால், இடமாறுதல் சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும், காலதாமதம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:கொரோனா பேரிடர் காலத்தில், மாணவர்களின் கல்வி நலன்கருதி, சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி, எந்தவொரு பள்ளியும், மாணவர்கள் கோரும் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.சான்றிதழ் கோரி விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள், சான்றிதழ் கிடைக்க பெறாத பெற்றோர், தங்கள் புகாரை, கல்வி அலுவலக தொலைபேசி வாயிலாகதெரிவிக்கலாம்.முதன்மை கல்வி அலுவலர் - 99653 15628, வட்டார கல்வி அலுவலர் - 90038 67902, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் - 94424 26525, தாராபுரம் - 98427 98855, பல்லடம் - 94864 11755, உடுமலை - 86678 87400 ஆகியோரிடம் புகார் செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X