கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை கண்டித்து ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
00:25

ராமநாதபுரம் : பெருமை வாய்ந்த ஹிந்து கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக்கும் தமிழக அரசின் திட்டத்தை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் ராமநாதபுரம், பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



தமிழகத்தில் பழமையான புகழ்வாய்ந்த கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த கோயில்களுக்கு மன்னர்கள், செல்வந்தர்கள், பொதுமக்கள் நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளனர். அப்படி வழங்கப்பட்ட நகைகளை தமிழக அரசு உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வைப்பீடு செய்ய முயற்சி செய்து வருகிறது.அவ்வாறு செய்வது நன்கொடை கொடுத்த பக்தர்களை அவமதிப்பது மட்டுமின்றி அந்த கோயிலின் பழம் பெரும் ஆவணங்களை அழித்து வரலாற்றை மறைக்கும் செயலாகும்.



எனவே கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் மண்டபம் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்றது. மாநில பேச்சாளர் ராஜகுரு பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்



மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், ராஜசேகர், ஒன்றிய தலைவர் கார்த்திக், நகர தலைவர்கள் நம்புராஜன், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் பரமக்குடி காந்தி சிலை அருகில் நகர் தலைவர் குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X