கோவில் நகையை உருக்க எதிர்ப்பு ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கோவில் நகையை உருக்க எதிர்ப்பு ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
00:30

திருப்பூர்:தமிழக அரசை கண்டித்து, திருப்பூரில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றும் திட்டத்துக்கு ஹிந்து முன்னணி, பா.ஜ., உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகம் முழுதும் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திருப்பூர் மாநகர மாவட்டம் சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்தலைமை வகித்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், தங்கக்கட்டி போன்ற அட்டையை 'பிஸ்கட்'டாக கடித்து சாப்பிடுவது, நரசிம்ம அவதாரத்தில் நகையை எடுப்பவர்களை அழிப்பது போன்று காட்சிகள், மேடையில் நடந்தன. மாநில செயலர்கள் கிஷோர்குமார், செந்தில்குமார் உட்பட பங்கேற்றனர்.



காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:கோவில் நகைகளை தி.மு.க., அரசு உருக்குவதை கண்டித்து தமிழகம்முழுதும், ஹிந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்காக நடத்தப்பட்ட யாத்திரை, மக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளதால், திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நிர்வாக குழு கூடி, அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X