கோவை வந்த ரயிலில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
00:32

கோவை:ரயிலில் கடத்தி வரப்பட்ட, 23.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.



ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. கோவை ரயில்வே டி.எஸ்.பி., யாஸ்மின் தலைமையிலான போலீசார் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, எஸ்., 4 பெட்டியில், இரு மூட்டைகளில் 23.5 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பயணியரிடம் விசாரணை நடத்தினர். அதில் இருந்த யாரும் தங்களுடையது இல்லை என, தெரிவித்தனர்.



கஞ்சாவை கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார், பின்னணி என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனர்.3 பேருக்கு 8 ஆண்டு சிறைதிருச்சி கே.கே., நகர் பகுதியில் வசித்து வந்த இலங்கை அகதிகள் ரகுநேஷ், 24, ஹரிஷ்ராம், 22, ராகவ், 25, ஆகிய மூவரும் இலங்கைக்கு கஞ்சா கடத்துவது, கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.



கடந்த, 2017ம் ஆண்டு, 2 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், மூவரையும் திருச்சி க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், மூன்று பேருக்கும் நான்கு பிரிவின் கீழ், 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார்.



ஹரிஷ்ராம், ராகவ் ஆகியோர் இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகத்திற்கு வந்தததற்காக, 1.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X