வி.சி., நிர்வாகி வெட்டி கொலை தி.மு.க., பிரமுகருக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
05:13

சேத்துப்பட்டு : முன்விரோதம் காரணமாக, சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியை வெட்டி கொடூரமாக கொலை செய்த வழக்கில், தி.மு.க., பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.



சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன், 52; ஓட்டுனர். விடுதலை சிறுத்தை கட்சியின், வட்ட துணை செயலராக உள்ள இவர், மேயர் சிட்டி பாபு தெருவில், வேலைக்கு ஆட்கள் வைத்து, டீ கடையும் நடத்தி வருகிறார்.டீ கடை அருகில், நேற்று முன்தினம் இரவு, இவரது நண்பர் ஜெயவேல்ராஜ், 48, என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.



அப்போது, அவ்வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கும்பல், இளங்கோவனை சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பினர். இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 2:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



சம்பவம் தொடர்பாக, சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கடந்த 20ம் தேதி, இளங்கோவன் டீ கடை ஊழியர்களுடன், மதுரவாயல் பகுதியை சேர்ந்த, தி.மு.க., இளைஞரணி உறுப்பினரான சஞ்சய் பிரபு என்பவருடன் தகராறு செய்துள்ளார்.இதுதொடர்பாக, இளங்கோவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இதனால், இளங்கோவனுக்கும் சஞ்சய் பிரபுக்கும் பிரச்னை இருந்ததுள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதத்தால், சஞ்சய் பிரபு தன் நண்பர்களுடன் சேர்ந்து, இளங்கோவனை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.தலைமறைவாக உள்ள சஞ்சய் பிரபுவை தனிப்படை போலீசார், மதுரவாயல் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் தேடி வருகின்றனர்.



சம்பவம் தொடர்பாக, சஞ்சய் பிரபுவின் அண்ணன், சேத்துப்பட்டு எம்.எஸ்., நகரை சேர்ந்த ராஜேந்திர பிரசாத், 51, மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளர் குமரவேல், 39, ஆகியோரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X