குப்பை மயமானது பெசன்ட் நகர் கடற்கரை; பராமரிப்பு பணியில் மாநகராட்சி மெத்தனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
05:22


பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் கடற்ரையில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் சரிவர பராமரிக்கப்படாததால், கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள், கண்ட இடங்களில் குப்பையை கொட்டுவது அதிகரித்து உள்ளது.



இதனால், கடற்கரையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சென்னையின் முக்கிய கடற்கரையாக, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளது. அருகிலேயே பிரபல கோவில்கள், சர்ச் ஆகியவை உள்ளன. இதனால், எலியட்ஸ் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். தற்போது, கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வரும் 1ம் தேதி முதல் கடற்கரைகளில் மக்கள் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



எனினும், அதற்கு முன்பாகவே, கடற்கரைக்கு மக்கள் வரத்து அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால், கடை வீதிகளுக்கு செல்லும் மக்கள், அப்படியே காற்று வாங்க கடற்கரைக்கும் படையெடுக்கின்றனர். தினமும் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யவும் மக்கள் அதிக அளவில் கடற்கரையை பயன்படுத்துகின்றனர்.



கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், குப்பையை கண்ட இடங்களில் கொட்டுவதை தடுக்க, எலியட்ஸ் கடற்கரையில், சிறிய வகை தொட்டி வைக்கப்பட்டது. அதேபோல், மூன்று ஆண்டுகளுக்கு முன், சிறுவர்களை கவரும் வகையில், இரும்பில் தயாரித்த மீன் வடிவ தொட்டி வைக்கப்பட்டது.துாரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில், பல வண்ணம் பூசப்பட்டு இருந்தது. கடற்கரைக்கு வரும் சிறுவர் - சிறுமியரை கவரும் வகையில் இந்த குப்பை தொட்டி அமைந்திருந்ததால், அவர்கள் தாங்களாகவே ஆர்வத்துடன் குப்பையை இந்த தொட்டியில் போட்டுச் சென்றனர்.



அப்பகுதியில், துாய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தினமும் அவற்றை அப்புறப்படுத்தி வந்தனர். சில நாட்களாக கடற்கரைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்ததால், மீன் வடிவ குப்பை தொட்டி பராமரிப்பு இல்லாமல் துருப்பிடித்து உள்ளது.இதனால், குப்பை தொட்டியின் அழகு பரிபோனதால், அது இருக்கும் இடமே தெரியாத வகையில் உள்ளது.இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், ஆங்காங்கே குப்பையை கொட்டிச் செல்கின்றனர்.



இதனால், கடற்கரையின் அழகு சீர்குலைந்ததுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு ஏற்கனவே உள்ள மீன்வடிவ குப்பை தொட்டியை வண்ணம் பூசி முறையாக பராமரிப்பதுடன், ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி வைத்து, மாநகராட்சி சார்பில் முறையாக கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X