விசைப்படகுகள் சிறைபிடிப்பு: மீனவர்களால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
05:23

பழவேற்காடு : பழவேற்காடு பகுதி மீனவர்கள் வீசும் வலைகளை, விசைப்படகுகள் அறுத்து சேதப்படுத்துவதால், நேற்று மீனவர்கள் தொழிலை புறக்கணித்து, விசைப்படகுகளை சிறைபிடிக்க, 100க்கும் அதிகமான பைபர் படகுகளில் கடலுக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடில், 15 மீனவ கிராமத்தினர், பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்கின்றனர். சில நாட்களாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த, அதிக குதிரை திறன் கொண்ட விசைப்படகுகளில் வரும் மீனவர்கள், பழவேற்காடு பகுதிக்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.பைபர் படகுகள் மீன் பிடிக்கும் இடங்களில், விசைப்படகுகள் வரக்கூடாது என்ற விதியை மீறுகின்றனர்.



இதனால், பழவேற்காடு மீனவர்கள் வீசும் வலைகள், விசைப் படகுகளில் சிக்கி சேதம் அடைகின்றன.விசைப்படகுகளால், பழவேற்காடு பகுதி மீனவர்களின் வலைகள் சேதம் அடைவதும், விசைப்படகு களால் மீன்வளம் குறைவதாகவும் கூறி, நேற்று மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர்.மேலும், கடலுக்குள் மீன்பிடிக்க வரும் விசை ப்படகுகளை சிறைபிடிக்க திட்டமிட்டனர்.அதற்காக, நேற்று 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குள் சென்றனர். பழவேற்காடு பகுதி மீனவர்கள் வருவதை அறிந்து, விசைப்படகுகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.



மீன்வளம், வருவாய் மற்றும் காவல் துறையினர் அங்கு முகாமிட்டு உள்ளனர். விசைப்படகுகளை சிறைபிடிக்க சென்ற மீனவர்களிடம் 'வாக்கி - டாக்கி' மூலம் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.மீனவர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட கூடாது, எல்லை தாண்டி வரும் விசைப்படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வலைகளை சேதப்படுத்தி, தொழில் பாதிப்பை ஏற்படுத்தி வரும், விசைப்படகுகளை சிறைபிடிக்க பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X