வீடுகளுக்குள் புகுந்து மொபைல் திருட்டு; 'சிசிடிவி' காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை | சென்னை செய்திகள் | Dinamalar
வீடுகளுக்குள் புகுந்து மொபைல் திருட்டு; 'சிசிடிவி' காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
05:25


பூந்தமல்லி : பூந்தமல்லியில், வீடுகளுக்குள் புகுந்து மொபைல் போன், லேப்டாப் திருடும் கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.



பூந்தமல்லி, ராஜா அக்ரகாரம் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் திருமழிசை பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், பெண்கள், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.சமீபகாலமாக, வாடகைக்கு தங்கியிருப்பவர்களின் வீடுகளை நோட்டமிட்டு, மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை திருடும் சம்பவம் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது.



இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சிவப்பு நிற சட்டை அணிந்து, இருசக்கர வாகனத்தில் வரும் இருவர், சாவகாசமாக இறங்கி, வீட்டிற்குள் செல்கின்றனர்.சிறிது நேரத்தில், மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை திருடி வெளியே வரும் அவர்கள், வாகனத்தில் ஏறி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து, பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா கட்சிகளை கொண்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X