கொக்கு பார்க் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் | செய்திகள் | Dinamalar
கொக்கு பார்க் சிக்னலில் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:03

புதுச்சேரி : இ.சி.ஆரில், கொக்கு பார்க் பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



புதுச்சேரியில், பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில், தீபாவளி சிறப்பங்காடி, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட திடலில், கடந்த 24ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.இங்கு மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள், அரசு மான்யத்தில் விலை குறைவாக விற்பனை செய்யப் படுகிறது.



இதனால், பாப்ஸ்கோ சிறப்பங்காடியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக இ.சி.ஆரில் கொக்கு பார்க் சிக்னலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, தீபாவளி பண்டிகை வரை கொக்கு பார்க் சிக்னலில் நெரிசலை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X