இரட்டை கொலை வழக்கு கூலிப்படையினருக்கு வலை | செய்திகள் | Dinamalar
இரட்டை கொலை வழக்கு கூலிப்படையினருக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:05

புதுச்சேரி : புதுச்சேரி, வாணரப்பேட்டை அடுத்த தாவீது பேட் நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி பாம் ரவி, 33; அந்தோணி பரிடா ஸ்டீபன், 28; ஆகிய இருவர், கடந்த 24ம் தேதி, அதே பகுதியில் 5 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.



முதலியார் பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரித்தனர்.காலாப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வினோத், தீன் இருவரும், கூட்டாளிகள் மற்றும் கூலிப்படை மூலம், கொலை செய்தது தெரிய வந்தது. கூலிப்படையினருக்கு உதவிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.ரவுடி வினோத் கடலுார் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்ட காஞ்சிபுரம் ரவுடி மூலம், திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்து, இருவரையும் கொலை செய்தது தெரிய வந்தது.கூலிப்படையை கைது செய்ய, சிறப்பு அதிரடிப்படை மற்றும் தனிப்படை போலீசார் காஞ்சிபுரம், திருச்சி விரைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X