கட்டுமான பொருட்கள் 40 சதவீதம் விலை உயர்வு; ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமையுமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:13

இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர் சங்கம், அசோசியேஷன் ஆப் மதுரை சிவில் இன்ஜினியர்ஸ், கிரெடாய், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, செளக்கோ சிவில் இன்ஜினியர் அசோசியேஷன், இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்டுமான பொருட்களின் விலையை குறைக்ககோரி கோஷமிட்டனர். பின் கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) வீரபத்திரனிடம் மனு அளித்தனர்.



தன்னிச்சையாக விலை உயர்த்தும் அவலம்




ரமேஷ்குமார், அசோசியேஷன் ஆப் மதுரை சிவில் இன்ஜினியர்ஸ் தலைவர்: ஒப்பந்தம் செய்த போது இருந்த விலையை காட்டிலும் சிமென்ட், கம்பி, செங்கல் உள்ளிட்டவை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் பொறியாளர்கள், கட்டுமானத்துறையினர், வீடுகட்டுவோர் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்டதை விட கூடுதலாக கேட்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. இந்த சுமை வீடு கட்டுவோர் தலையில் விழுகிறது.



முடங்கியது கட்டுமான தொழில்




முத்துவிஜயன், கிரெடாய் செயலாளர்; எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பொருட்கள் விலை ஓராண்டில் கடுமையாக உயர்ந்துள்ளது. சிமென்ட் விலை கடந்த ஜன.,ல் ரூ.380ஆக இருந்தது. தற்போது ரூ.550 ஆக உயர்ந்துள்ளது. சென்ட்ரிங் பொருட்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. விலை உயர்வால் கட்டுமான தொழில் நடக்காததால் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்கின்றனர். விலைஉயர்வு உற்பத்தியாளர்களுக்கு தவிர்க்க முடியாதது தான். குறிப்பிட்ட சதவீதம் மனசாட்சியுடன் விலை உயர்த்த வேண்டும். விலையை நிர்ணயிக்க ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைக்க வேண்டும்.



போராட்டம் தவிர்க்க முடியாது




வெற்றிக்குமரன், கட்டுமான பொறியாளர்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தமிழக அரசு உடனடியாக கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாவிட்டால் மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகி விடும் என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202119:11:15 IST Report Abuse
அப்புசாமி கட்டுமானப்.பொருள்களுக்கும் ரேஷன் வெச்சு, ஒரே நேஷன், ஒரே ரேஷன் திட்டத்துல குடுக்கலாம். நாடு பொருளாதார வளர்ச்சியில் கூரையை பிச்சிக்கிட்டு போகுது.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
27-அக்-202113:16:25 IST Report Abuse
SENTHIL NATHAN விடியாலோ விடியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X