குடிநீர் வினியோகம் இல்லை: மண் ரோடால் விபத்து அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:28

தேனி : குடிநீர் இணைப்புக்கள் வழங்கிய பின்பும் சப்ளை இல்லை, குண்டும் குழியுமான மண் ரோடுகளில் பரவியுள்ள சரளைக்கற்களால் போக்குவரத்திற்கு சிரமம், மழைகாலங்களில் பள்ளம் ஏற்படுவதால் விபத்தில் சிக்கும் அபாயம், எரியாத தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் தெருக்கள் என பல்வேறு குறைபாடுகளால் சிரமப்படுவதாக அரண்மனைப்புதுார் ஊராட்சி திருமலை நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குமுறுகின்றனர்.



குடியிருப்புப் பகுதியில் 1, 2,3 மெயின் தெருக்கள், 6 குறுக்குத் தெருக்கள், பத்மாவதி நகர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 260 குடியிருப்புக்கள் உள்ளன. நலச்சங்கத்தின் தலைவர் எட்வின், செயலாளர் தாமரைக்கண்ணன், பொருளாளர் பெருமாள்சாமி, உறுப்பினர்கள் சீனிவாசன்,பிரபு,மனோகரன், நாராயணசாமி, சேதுராமன், விஜயராகவன், கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறியதாவது: “2012ல் ஊராட்சி அனுமதியுடன் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை விரிவாக்கப் பகுதியான திருமலைநகரில் உள்ள 3 மெயின் தெருக்களில் தார் ரோடுகள் அமைக்கவில்லை. குறுக்குத் தெருக்களிலும் ரோடுகள் அமைக்காமல் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தொகுதி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்திடமும், ஊராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பிரச்னை தீரவில்லை. முறையான சாக்கடை வசதி, அனைத்து தெருக்களிலும் தார்ரோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.குடிநீர் பற்றாக்குறைஆசிரியர் கூட்டமைப்பு கட்டடம் அருகே 1 லட்சம் லிட்டர் கொள்ளவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இங்கிருந்து பசுமை நகர் குடியிருப்புக்கு குடிநீர் வழங்குகின்றனர். ஆனால், மேல்நிலைத் தொட்டி அமைக்க இடம் வழங்கிய எங்கள் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வினியோகம் செய்ய வில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கிறோம். ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதல் தெரு விளக்கு தேவை:50 மீட்டர் இடைவெளியில் தெருவின் ஓரத்தில் மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பது மின்சாரவாரிய விதி. ஆனால், அதிக இடைவெளியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, இரவில் இருளில் மூழ்கும் அபாயம் திருமலை நகர் முழுவதும் உள்ளது. அதனால் தேவைப்படும் இடங்களில் மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் திருமலை நகரில் அரசு பஸ்சில் சென்றுவர பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். திருட்டு சம்பங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும்.'' என்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X