அயோடின் குறைபாடு தடுப்பு தினம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
அயோடின் குறைபாடு தடுப்பு தினம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:29

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி இந்திலி ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவன தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார்.



கல்லுாரி தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜு முன்னிலை வகித்தனர். இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் சரண்யாதேவி வரவேற்றார்.மாவட்ட நுகர்வோர் மன்ற செயலாளர் அருண்கென்னடி, அனைத்து வணிகர் சங்க தலைவர் செல்வக்குமார், அயோடின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் அயோடின் உப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சுந்தர்பாபு, சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், தனி செயலாளர் ஆறுமுகம் கருத்துரை வழங்கினர்.மாணவர்களுக்கு அயோடின் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் செய்திருந்தார். முதல்வர் மோகனசுந்தர் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X