ஈரப்பதம் அதிகம் என வாங்க மறுப்பதால் விவசாயிகள் விவசாயிகள் தவிப்பு; நெல் கொள்முதலில் வாணிப கழகம் கெடுபிடி | தேனி செய்திகள் | Dinamalar
ஈரப்பதம் அதிகம் என வாங்க மறுப்பதால் விவசாயிகள் விவசாயிகள் தவிப்பு; நெல் கொள்முதலில் வாணிப கழகம் கெடுபிடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
07:30

கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் முதல் போக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.



விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 10 நாட்களுக்கு முன்பு கம்பத்தில் 2, சின்னமனுார், உத்தமபாளையத்தில் தலா ஒன்று என 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தி வருகிறது. 100 கிலோ கொண்ட குவிண்டால் ஏகிரோடு ரூ.2060க்கும், பொது ரகம் குவிண்டால் ரூ.2015க்கும் கொள்முதல் செய்கின்றனர்.



தயக்கம்




தேனி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்த நெல் மழையால் பாதித்துள்ளது. நெல்லில் ஈரப்பதம் 18 சதவீதம் வரை இருந்தால் கொள்முதல் செய்கின்றனர். ஈரப்பதம் ஒரு சதவீதம் அதிகம்இருந்தால் கூட கொள்முதலில் தயக்கம் காட்டுகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்தவுடன் ஈரப்பதம் 20 ஐ தாண்டி உள்ளது. இதனால் நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.



ஈரப்பதம்




சுகுமாறன், செயலாளர்,விவசாய சங்கம் கம்பம்: கனமழை பொருட்படுத்தாமல் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர். ஈரப்பதம் 18 சதவீதம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் எடுக்க மாட்டோம் என்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் ஈரப்பதம் 22 சதவீதத்திற்கும் மேல் இருந்தாலும் எடுக்கின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நெல்லில் ஈரப்பதம் 20 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X