கோவை:கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை காந்திபுரம் முனியப்பன் கோவில் அருகில், ஹிந்து முன்னணி சார்பில், மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் சதீஷ் கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் பேசினர்.அம்பாள், அம்மன், முருகன், விநாயகர், சிவன், பார்வதி, மகாவிஷ்ணு, பாரதமாதா வேடமணிந்து தொண்டர்கள் பங்கேற்றனர். தங்க நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி வந்தனர்.