ரூ.1.13 லட்சம் செலுத்தி ஏமாந்த அப்பாவி வாலிபர் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ரூ.1.13 லட்சம் செலுத்தி ஏமாந்த அப்பாவி வாலிபர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
10:27

கோவை:கோவை, சின்னதடாகத்தை சேர்ந்தவர் தினேஷ், 28; டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். இவர் பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்து ஒரு இணையதளத்திற்கு சென்று பெயர், மொபைல்போன் எண், முகவரியை பதிவு செய்தார்.அவரது 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு வந்த தகவலில், குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி, உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அந்த இணையதளம் வழியாக நடைபெறும் பொருட்கள் விற்பனையில் அதிக கமிஷன் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.இதனை நம்பிய அவர், ஆன்லைன் மூலம்5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம், 30 ஆயிரம் என பல்வேறு தவணைகளாக, ரூ.1.13 லட்சம் செலுத்தினார். கமிஷன் பணம் எதுவும் வரவில்லை. இணையத்தில் இருந்த மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. புகாரின்படி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X