வணிக வரி உதவியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வணிக வரி உதவியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
10:28

கோவை:வசூல் செய்த, ரூ.16 லட்சத்தை மோசடி செய்த வணிக வரித்துறை உதவியாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பொள்ளாச்சி, சேரன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 56. இவர் வணிக வரித்துறையில், விற்பனை வரிவசூல் உதவியாளராக, 2005 முதல், 2007ம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.குறிப்பிட்ட காலத்தில் கணபதி வரிவிதிப்பு வட்டத்தில், ரூ.16.15 லட்சம் வரிவசூல் செய்யப்பட்டது. இத்தொகையை வசூல் செய்த செந்தில்குமார், அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். ஆய்வில், அவர் மோசடி செய்தது உறுதியானது.இதையடுத்து கோவை வணிக வரித்துறை உதவி கமிஷனர் பிரபு, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X