குளத்தில் பவுண்டரி கழிவுநீர் கலப்பதால் மக்கள் அதிர்ச்சி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
குளத்தில் பவுண்டரி கழிவுநீர் கலப்பதால் மக்கள் அதிர்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
10:35

அன்னூர்:பவுண்டரி கழிவுநீர் குளத்தில் கலப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, அச்சம்பாளையத்தில் ஊருக்கு கிழக்கே மூன்று ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் நிரம்பினால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாட்களும், அன்னூர் பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையின் போது அச்சம்பாளையத்தில் உள்ள பவுண்டரிகளில் இருந்து ரசாயனம் கலந்த மண்ணில் விழுந்த கருப்பு கழிவுநீர் ரோட்டோர பள்ளங்களில் ஓடி குளத்தில் வந்து தேங்கியுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அச்சம் பாளையம் குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் பவானி ஆற்று நீர் நிரப்ப குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஆற்றுநீர் இந்த குளத்தில் நிரப்பப்பட உள்ளது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் பவுண்டரிகளில் வைக்கப்பட்டுள்ள ரசாயனம் கலந்த கருப்பு மண்ணில் விழுந்த கழிவுநீர் குளத்தில் தேங்கியபடி உள்ளது. மழைக்காலம் தற்போதுதான் துவங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய உள்ளது. இந்த கழிவுநீர் குளத்தில் சேருவது அதிகரித்தால், அத்திக்கடவு திட்டத்தில் குளத்தில் நீர் நிரப்பியும் பயனில்லாமல் போகும். குளத்தில் கழிவு நீர் தேங்கினால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடும். எனவே பவுண்டரியில் இருந்து கழிவு நீர் குளத்தில் தேங்காமல் ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X