மூன்றாவது அலை ஏற்பட்டால், சமாளிக்க பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை தயார்...!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
10:40

பெ.நா.பாளையம்:கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், அதை சமாளிக்க பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வீரபாண்டி, சின்னதடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, குருடம்பாளையம், அசோகபுரம், நாயக்கன்பாளையம், பிளிச்சி ஆகிய ஊராட்சிகளிலும், நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பகுதியிலிருந்து தினசரி நுாற்றுக்கணககான நோயாகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது, இரவு - பகல் பாராமல் இந்த மருத்துவமனை செயல் பட்டது. தற்போது, தினமும் குறைந்தபட்சம், 500 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை தடுக்கவும், பாதிக்கும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறியதாவது :கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் சிகிச்சை பெற, 36 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தொற்று அதிகரித்தால், சிகிச்சைக்கு வரும் நபர்களின் உடல்நிலையை உடனடியாக கண்டறிந்து, அவசர சிகிச்சை அளிக்க, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் ஷெட் அமைக்கப்பட்டு, அதில் படுக்கைகள் போடப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.


தொற்று பாதித்து வரும் நபர்களுக்கு ஆக்சிஜன் அளிக்க, சிலிண்டர்கள் தயார் நிலையில், படுக்கை அருகிலேயே வைக்கப்பட்டுள்ளன. பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், கோவிட் தொற்று நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம், 65 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்து எடுத்து, அதை தூய்மைப்படுத்தி, குழாய் வழியாக நோயாளிகளுக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிமிடத்திற்கு, 250 லிட்டர் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு வழங்கலாம். பத்து நோயாளிகள் இருந்தால், ஒரு நிமிடத்திற்கு தலா, 25 லிட்டர் வீதம் ஆக்சிஜன் அளிக்கலாம்" என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X