தேசிய மல்யுத்தத்தில் பதக்கம்: அரசுப்பள்ளி மாணவிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
தேசிய மல்யுத்தத்தில் பதக்கம்: அரசுப்பள்ளி மாணவிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
10:59

அம்மாபேட்டை: பள்ளிகள் அளவிலான தேசிய மல்யுத்த போட்டி, டெல்லியில் நடந்தது. இதில், 20 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து, 128 பேர் பங்கேற்றனர். ஒரு தங்கம், நான்கு வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களை பெற்றனர். இதில் குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் ? மாணவி அட்சயா, வெண்கல பதக்கம் வென்றார். போட்டி முடிந்து ஊர் திரும்பிய மாணவிக்கு, குருவரெட்டியூர் மக்கள், மாலை அணிவித்து, மேள, தாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X