மோசடி புகாரால் மாநகராட்சி ஊழியர் ஓட்டம்; 'ஆசை நூறு வகை; அவதி நானூறு வகை' | ஈரோடு செய்திகள் | Dinamalar
மோசடி புகாரால் மாநகராட்சி ஊழியர் ஓட்டம்; 'ஆசை நூறு வகை; அவதி நானூறு வகை'
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
10:59

ஈரோடு: வேலை வாங்கி தருவதாக, 1.50 லட்சம் மோசடி செய்ததாக, புகார் வந்த நிலையில், மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஓட்டம் பிடித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெருந்துறை வடமுகம் வெள்ளோடு, செம்மாண்டம் பாளையம் காலனியை சேர்ந்தவர் லோகநாதன், 29; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பி.ஏ., ஆங்கில பட்டதாரியான நான், ஒரு மாலில் பாதுகாப்பு பணி செய்து வந்தேன். அப்போது ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில், தற்காலிக மலேரியா ஒழிப்பு பணி ஊழியர் சலீம், ??, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஈரோடு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், கிளர்க் பணி வாங்கித் தருவதாக சலீம் கூறவே, 1.50 லட்சம் ரூபாய் தந்தேன். ஆறு மாதம் கழித்து, வேலை கிடைத்துவிட்டதாக கூறினார். போலி ஆவணங்களை வழங்கியதோடு என் பெயரில், வங்கி கணக்கு தொடங்கி, சம்பளப்பணம் என்று கூறி, 11 ஆயிரத்து, 743 ரூபாயும் போட்டார். இந்நிலையில் அலுவலகத்துக்கு சென்றபோதுதான், சலீம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக காலையில், மாநகராட்சி மூன்றாம் மண்டல அலுவலகத்துக்கு சென்ற லோகநாதன், உதவி கமிஷனர் விஜயாவிடம் மனு அளித்தார். இதை தொடர்ந்து, சலீமை அழைத்து வருமாறு அவர் தெரிவித்தார். அலுவலகத்துக்கு வந்த சலீம், அடையாள அட்டையை எறிந்து விட்டு தலைமறைவாகி விட்டார் என்று, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X